விஜய் டிவியில் சற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டார்ஸ். இதில் வரும் கதிர், முல்லை மற்றும் ஜீவா, மீனா ஜோடிகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஹேமா.
நடிகை ஹேமா ஆரம்பத்தில் வில்லி போன்ற தோற்றத்தில் அறிமுகமானாலும் தற்போது தன் வெளிப்படையான பேச்சால் தமிழ் ரசிகர்களின் பிரியமான சீரியல் நடிகையாக மாறியுள்ளார். இவர் உணமையிலேயே கர்ப்பிணியாக இருந்த போது கூட அனைத்து எபிசோடுகளிலும் இடம் பெற்று நடித்தது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நடிப்பு தவிர இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகள், அழகு குறிப்புகள் என அந்த சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட வீதி சீரியலில் நடித்துள்ளார் என்ற சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியலில் கௌதம் கதாபாத்திரத்தில் வரும் சுர்ஜித்தின் ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்