தமிழ் மொழியில்  களம் இறங்கும் கன்னட திரைப்பட நடிகை… இவருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் இப்படி ஒரு உறவா??

0

கன்னட திரை துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை தன்யா ராம்குமார். இவர் தமிழ் மொழியில் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்திற்கான முழுமையான தகவல்கள் அதாவது, கதாநாயகன், மற்ற நடிகர்களின் விவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த தன்யா ராம்குமார் என்பவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் பேத்தி ஆவார்.

கன்னட திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ராஜ்குமார். இவர் அந்த திரைதுறையில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறார். மேலும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார். அவரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் போன்ற நடிகர்கள் கன்னட திரையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். மேலும் நடிகர் ராஜ்குமார் தமிழ் மொழியின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார்.

அவரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் கன்னட மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தமிழில் படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் ஒரு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here