2021 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி – இந்தியாவின் உரிமம் பறிப்பு..!

0

2021ம் ஆண்டிற்கான ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான கட்டணத்தை செலுத்தாததால் இந்தியாவிடம் இருந்து போட்டியை நடத்துவதற்கான உரிமம் பறிக்கப்பட்டு உள்ளது.

உலக குத்துச்சண்டை அமைப்பு:

இந்தியாவில் 2021ம் ஆண்டு ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியை நடத்துவதற்காக இந்திய அமைப்பு, கடந்த 2017ம் ஆண்டு உலக குத்துச்சண்டை அமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது போட்டியை நடத்துவதற்கான பணத்தை இந்திய குத்துச்சண்டை அமைப்பு செலுத்ததால் இந்த உரிமம் பறிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவிற்கு 500 டாலர் அபராதத்தொகை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது போட்டியை நடத்துவதற்கான உரிமம் செர்பியாவிற்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய அமைப்பின் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த இந்திய குத்துச்சண்டை அமைப்பு, ஸ்விட்சர்லாந்தில் உள்ள உலக குத்துச்சண்டை அமைப்பின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. இதனால் செர்பியாவில் உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துமாறு உலக குத்துச்சண்டை அமைப்பு தெரிவித்தது.

ஆனால் இந்தியாவில் இருந்து செர்பியாவிற்கு பணம் அனுப்புவது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த சிக்கலை தீர்த்து வைக்காமல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அபராதத்தொகையை உலக குத்துச்சண்டை அமைப்பு திரும்பப்பெறும் என இந்தியா நம்புவதாக தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here