Hackers க்கு RBI வச்ச செக்.. ஆன்லைன் ஷாப்பிங் பண பரிவர்த்தனையில் வரவுள்ள புதிய மாற்றங்கள்!!

0
தற்போது உள்ள சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைன்னில் பொருட்கள் வாங்கவே விரும்புகின்றனர். எனவே அதிரடி சலுகைகளிலும், மக்களை கவரும் விளம்பரங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
அவ்வாறு மக்கள் முதல் முறையாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தங்களது டெபிட் கார்டின் விவரங்களை உள்ளீடு செய்வர். பின்னர் அடுத்த முறை அதே செயலியில் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும்போது CVV நம்பர் மட்டும் அளித்தால் போதும். இது பயனர்களுக்கு சுலபமாக இருந்தாலும், டெபிட் கார்டின் விவரங்கள் செயலியில் எப்போதும் இருப்பது ஆபத்து தான்.
  ஏனேனில் அவர்களது மொபைல் போன் பிறரின் கைகளுக்கு சென்றால் இந்த விவரங்களை அவர்களால் எடுக்கமுடியும். இதை தடுக்க RBI புதிய ஆன்லைன் பணபரிவர்த்தனை முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் ஒவ்வொரு முறையும் 16 இலக்க டெபிட் கார்டு நம்பர், CVV நம்பர் போன்றவற்றை உள்ளீடு செய்யவேண்டும்.
இந்த புது விதிமுறை ஜனவரி 2022 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், கூகுள் பே மற்றும் நெட்ப்ளிகஸில் புதிய சப்ஸ்கிரிப்ஷன் ஆகிய அனைத்து பண பரிவர்த்தனைக்கும் பொருந்தும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here