கடத்தல்காரனுடன் சண்டையிட்ட 11 வயது சிறுமி- குவியும் பாராட்டு

0

அமெரிக்காவின் புளோரிடாவில் தனது பள்ளி பேருந்துக்காக காத்திருந்த 11 வயது சிறுமி கடத்தல்காரனிடம் சண்டையிட்டு சாமர்த்தியமாக தப்பித்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

துணிச்சல் மிக்க சிறுமி :

அமெரிக்காவின் புளோரிடாவில் செவ்வாய்க்கிழமை அன்று தனது பள்ளி பேருந்துக்காக காத்திருந்த 11 வயது சிறுமி கடத்தல் காரனால் கத்தியை காட்டி தாக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமியை வாகனத்தை நோக்கி இழுத்து செல்ல முயற்சிப்பது சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மிக சாமர்த்தியமாக கடத்தல் காரனிடம் சண்டையிட்டு தன்னை காத்துக்கொண்டுள்ளார் அந்த சிறுமி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சிறுமியை தன்காரை நோக்கி இழுத்து செல்லும் வழியில் கடத்தல்காரனை குத்தியும், உதைத்தும் கடத்தல்காரனின் பிடியிலிருந்து தப்பினார். இவை அனைத்தும் அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவானதை ஆதாரமாக மேற்கொண்டு மேலும் சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். சிறுமியின் இந்த துணிச்சலான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இச்சிறுமியின் துணிச்சல் மிக்க செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here