வாட்ஸ் அப்பில் வருதுங்க சூப்பர் அப்டேட் .,21 புதிய எமோஞ்சி அறிமுகம்., மெட்டா அதிரடி அறிவிப்பு!!

0
வாட்ஸ் அப்பில் வருதுங்க சூப்பர் அப்டேட் .,21 புதிய எமோஞ்சி அறிமுகம்., மெட்டா அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ்அப் செயலியில் புதிதாக, ஏற்கனவே உள்ளது போக 21 புதிய எமோஞ்சிகள் களமிறங்க உள்ளதாக மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்டா அறிவிப்பு:

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான வாட்ஸ் அப், மெட்டா நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த whatsapp தளத்தில், நாள்தோறும் பல புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குரல் பதிவுகளை வைக்கும் அப்டேட், வீடியோ மற்றும் ஆடியோ காலில் இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறுந்தகவல்களை அழிக்கும் நேரம் நீட்டிப்பு போன்ற கணக்கில் அடங்காத பல அப்டேட்கள் கொண்டுவரப்பட்டது.

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய இளம் வீரர்கள்…, குவியும் பாராட்டுக்கள்!!

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டா செயலியில் உள்ளது போல, பயனர்கள் குறுந்தகவல்களுக்கு எமோஞ்சி மூலம் ரிப்ளை அனுப்புவதற்காக, 8 எமோஜிகள் அடங்கிய அப்டேட் சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, whatsapp messenger இல் அப்டேட் செய்யும் விதமாக 21 புதிய எமோஜிகளை களமிறக்க மெட்டா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தற்போது இறுதி கட்ட சோதனையில் இருக்கும் இந்த அப்டேட் ஆனது, விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here