உலக கோப்பைக்கான தேர்வு சரியில்லை.., ஏன் இளம் வீரர்களை அணியில் எடுக்கவில்லை.., சரமாரியாக கேள்வி கேட்கும் சேவாக்!!

0
உலக கோப்பைக்கான தேர்வு சரியில்லை.., ஏன் இளம் வீரர்களை அணியில் எடுக்கவில்லை.., சரமாரியாக கேள்வி கேட்கும் சேவாக்!!
உலக கோப்பைக்கான தேர்வு சரியில்லை.., ஏன் இளம் வீரர்களை அணியில் எடுக்கவில்லை.., சரமாரியாக கேள்வி கேட்கும் சேவாக்!!

இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் திரும்பியதால், அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டனர். இந்த மாற்றங்களில் குறிப்பாக, ஐபிஎல் தொடர் மூலம் சிறந்து விளங்கிய இளம் வீரர்களை அணியில் ஒவ்வொரு தொடரிலும் இணைத்துக் கொண்டனர். இதன் விளைவால் இந்திய அணி ஒரு சில போட்டிகளில் தோற்றாலும், டி 20 தொடர்களை கைப்பற்றி அசத்தி வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கூட சரிவர மாற்றியமைக்கமால் விளையாடி அரையிறுதியுடன் நாடு திரும்பி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து விளையாடிய, இருதரப்பு தொடர்களில் எல்லாம் வெற்றியை அடைந்திருந்தனர்.

டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த வீரர் யார்?? ஐசிசி தேர்வு பட்டியல் வெளியீடு!!

குறிப்பாக அந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும். ஆனாலும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த உலக கோப்பையில் இளம் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இந்திய அணி தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ருத்துராஜ் இவர்கள் எல்லாம் சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை சிறப்பாக பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு உலக கோப்பை தொடரில் இடம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here