விழா மேடையில் வாலிபரை சரமாரியாக அடித்த பாஜக எம்பி – கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்!!

0

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பாஜக கட்சி எம்பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங், இந்த விழாவில் இருந்த இளைஞரை கன்னத்தில் அறைந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வலுக்கும் எதிர்ப்பு :

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் கைசர்கஞ்ச் தொகுதியின் எம்பியாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ஷரன் சிங். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த மல்யுத்த வீரரான இளைஞர், தானும் அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் 15 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அவர் மேடைக்கு சென்று எம்பி யிடம் ஓயாமல் அனுமதி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எம்பி, அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து எம்பியின் இந்த செயலுக்கு, எதிர்கட்சியினர் வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர் இளைஞரை தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here