ரயில் பயணிகளுக்கு ஷாக் – சென்ட்ரலில் நிரம்பி வழியும் கூட்டம்! விழி பிதுங்கி நிற்கும் பொது மக்கள்!!

0
நாட்டின் முக்கியமான ரயில் நிலையம், பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் பொதுமக்கள் கடும் சிக்கலில் தவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 கடும் நெரிசல் :

பெரும்பாலான மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முக்கியமான போக்குவரத்து சேவைகளில்   ஒன்று ரயில். குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தை அளிப்பதால், உள்ளூர் வாசிகள் முதல் அதிக தூரம் பயணம் செய்பவர் வரை ரயில் சேவையை அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று PET என்ற தேர்வு நடத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தத் தேர்வு முடிந்ததும்,  இதில் பங்கேற்ற தேர்வர்கள்,  தேர்வு மையங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஒரே நேரத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் அதிக அளவு கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதுவும் குறிப்பாக மாலை நேரங்களில் கான்பூர்  சென்ட்ரல், காஜிப்பூர் மற்றும் சீதாப்பூர்  ஆகிய ரயில் நிலையங்களில் தேர்வர்களின் வருகையால் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை சமாளிக்க முடியாமல்,  ரயில்வே அதிகாரிகள் திணறினர்.
பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சென்றோர், வேலைக்கு சென்று திரும்பியோர் மற்றும் தேர்வர்கள்  ஆகியோரின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கடும் நெரிசல்  ஏற்பட்டது.  இனி வரும் நாட்களில் இது போன்ற முக்கியமான  தினங்களில் போதுமான போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here