Home செய்திகள் இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு – இலங்கை நிலைக்கு தள்ளப்படுகிறதா நாடு? மத்திய நிதி அமைச்சர் பகீர் பேட்டி!!

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு – இலங்கை நிலைக்கு தள்ளப்படுகிறதா நாடு? மத்திய நிதி அமைச்சர் பகீர் பேட்டி!!

0
இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு – இலங்கை நிலைக்கு தள்ளப்படுகிறதா நாடு? மத்திய நிதி அமைச்சர் பகீர் பேட்டி!!

அமெரிக்க பயணத்திற்கு பின், சமீபத்தில் நாடு திரும்பியும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலர் மதிப்பை ஒப்பிட்டு, இந்திய ரூபாய் மதிப்பு குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பேட்டி:

இந்திய ரூபாயின் மதிப்பு சமீப தினங்களாக, கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு பின்பு வலுவடைந்து வந்த பொருளாதாரம், சமீப காலமாக மீண்டும் மந்த நிலையை அடைந்து 82.69ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கி வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிய அவர், அமெரிக்க USD டாலர் மதிப்பை ஒப்பிட்டு, இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். இதற்குக் காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று இருப்பது தான் என்றும், இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். RBI வங்கி இது குறித்து கண்காணித்து வருவதாகவும், இந்திய பொருளாதார பிரச்சனைகளில் இதன் தலையீடு பெரிய அளவில் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

எல்லை மீறிய ஜனார்த்தனன்.., கோவத்தில் கத்திய மூர்த்தி.., நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

கடந்த சில மாதங்களாக, நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, இதே போல் நிலை இந்தியாவிலும் ஏற்படுமா? என பொருளாதார வல்லுநர்கள் அஞ்சி வந்தனர். இவர்களின் அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நிதி அமைச்சரின் விளக்கம் அமைந்துள்ளது. அமைச்சரின் இந்த விளக்கத்தை அடுத்து, பொருளாதார மதிப்பு பிரச்சனை குறித்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here