தமிழக போட்டி தேர்வர்களுக்கு ஜாக்பாட் – முக்கிய துறைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் அதிரடி!!

0
தமிழக போட்டி தேர்வர்களுக்கு ஜாக்பாட் - முக்கிய துறைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் அதிரடி!!
தமிழக போட்டி தேர்வர்களுக்கு ஜாக்பாட் - முக்கிய துறைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக துறைகளில், உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கியமான பணி நியமன ஆணைகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அதிரடியாக வழங்கினார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில் உள்ள முக்கியமான துறைகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மற்றும் அந்தந்த துறைகளில் போட்டித் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை, மருத்துவ பணியாளர் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துறையில், உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நியமன ஆணைகளை பணியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், நுகர்ப்பொருள் வாணிப கழகத்துறையில் உள்ள பருவ கால எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணிகளுக்கான நியமன ஆணைகளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here