சம்யுக்தாவுக்கும் நயன்தாராவுக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்குபெற்ற சம்யுக்தா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்யுக்தா:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 4 சீசன்களாக மக்கள் மத்தியில் அமோக வரவேற்புடன் ஓடி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றவர் தான் சம்யுக்தா. இவர் தொடக்க காலத்தில் மாடலிங் துறையில் தலை சிறந்து விளங்கி வந்தார்.

அதன்பின்பு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது இவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது என்றே கூறலாம். மேலும் இவர் பேசும் தமிழ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நடுநிலைமையாக இவர் விளையாடி வருகிறார் என்றும் ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இவர் பைனலுக்கு முன்னேறாதது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் அடைய செய்தது. இந்நிலையில் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாராவுடன் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா உங்களின் அடுத்த பிராஜெக்ட்டா இது என்றும் வினவி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here