அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த மாதம், தக்காளியின் வரத்து சந்தைகளில் குறைய தொடங்கியதை அடுத்து, கிலோ ரூ. 200 வரைக்கும் எகிறி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ள நிலையில், அதன் விலையும் குறைய தொடங்கி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, இன்றைய விலை நிலவரப்படி தென் காசியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 20- க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் ஒரு கிலோ விலை விவரமானது, சின்ன வெங்காயம் ரூ. 65, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ. 96, கேரட் ரூ.44, தேங்காய் ரூ. 30, பீட்ரூட் ரூ. 40, மாங்காய் ரூ. 70 மற்றும் வெண்டை ரூ. 15 க்கும் விற்பனையாகிறது. ஆனால், இஞ்சியின் வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிலோ காய்ந்த இஞ்சியின் விலை ரூ. 280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்., இம்மாத வெள்ளி, சனி கிழமைகளில்.,