வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு வரும் தக்காளி, காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் எக்குத்தப்பாக அதிகரித்தது. குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
நேற்று வரை கிலோ 140 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்றைய நிலவரப்படி கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து 150 க்கு விற்கப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.