தமிழக அரசு பேருந்து பயணிகளுக்கு நற்செய்தி., முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்., TNSTC வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னதாகவே, முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வசதியை 60 நாட்களுக்கு முன்னதாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த வசதியை www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலோ அல்லது TNSTC  என்ற மொபைல் ஆப் மூலமாகவோ முன்பதிவு செய்து பயணிக்கலாம். இதன்மூலம் பண்டிகை, வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிதாக பயணம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இத மட்டும் பண்ணுங்க போதும்.., முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here