தமிழக போக்குவரத்து துறைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்?? தொடரும் போராட்டம்!!

0
தமிழக போக்குவரத்து துறைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்?? தொடரும் போராட்டம்!!
தமிழக போக்குவரத்து துறைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்?? தொடரும் போராட்டம்!!

தமிழக போக்குவரத்து துறையானது, விழா காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பேருந்துகளை அறிவித்து, மக்களின் சேவையை எளிமையாக்குகிறது. இதற்காக, பல ஒப்பந்த ஊழியர்களை அரசு நியமித்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று (அக்டோபர் 26) ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த கூட்டத்தின் முடிவில், போக்குவரத்துக் கழகத் துறையில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தல் கூடாது, காலிப் பணியிடங்களை விரைவில் பூர்த்தி செய்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துதல், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை சென்னையில் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக 100 நாள் ஊழியர்களே., சம்பள பிரச்சினைக்கு நடவடிக்கை? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here