தமிழகத்தில் இந்த கடைகள் இயங்க தடை – தீபாவளி நெருங்கும் நேரத்தில் அதிகாரிகள் திடீர் உத்தரவு!!

0

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், அனுமதி இல்லாமல் இந்த கடைகளை மட்டும் திறக்க கூடாது என மாவட்ட அதிகாரிகள், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

அதிரடி உத்தரவு:

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் இதற்கு முழு மூச்சாக தயாராகி வருகின்றனர். முக்கிய கடைவீதிகளில், பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிலர் தங்கள் வீடுகளில் தயார் செய்யும் இனிப்பு கார வகைகளை, சிறு கடைகள் அமைத்து விற்பனை செய்வது உண்டு. தற்போது இந்த கடைகளை அனுமதியின்றி திறக்க கூடாது என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சொந்த மண்ணில் கெத்து காட்டும்மா சென்னையின் FC…, பெங்களூருடன் இன்று பலபரிச்சை!!

அதாவது, மத்திய அரசு தடை செய்த அதிக ஆபத்து கொண்ட வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை தயார் செய்யக் கூடாது எனவும், அரசு அங்கீகரித்துள்ள வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது எனவும், சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அதிக கலரிங் பொருட்களை உபயோகிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பலகார கடைகள் அமைப்பதற்கு ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டும் எனவும், இதனை மீறி இயங்கும் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு, உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here