
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டால் போதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிடுகின்றன. அந்த வகையில் மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களில் ஒன்றாக சென்னையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்றவை உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த பூங்காக்களின் நிர்வாகத்தை மாற்றியமைக்கவும், வளர்ச்சி பணிக்காகவும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இலவச கட்டணமும், 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும்.
அதே போன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.200, பேட்டரி வாகன கட்டணம் ரூ.150, வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.60, 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10, வீடியோ கேமராவுக்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.