
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இதுவரை நடைபெறாததால், பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதமாக ஒதுக்க வேண்டும் என புதுவை அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை பரிசீலித்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதையடுத்து, புதுச்சேரியில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் M.B.B.S. பயில வாய்ப்புள்ளது. இனி சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவ கல்வி சேர்க்கைக்கான அதிகாரபூர்வ தேதி அறிவிப்பை அரசு வெளியிடலாம் என மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.
பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!