தமிழகத்தில் பேமஸ் ஹோட்டலில் ரெய்டு – அழுகிய சிக்கன், பிரியாணி பறிமுதல்! அதிகாரிகள் அதிரடி!!

0
தமிழகத்தில் பேமஸ் ஹோட்டலில் ரெய்டு - அழுகிய சிக்கன், பிரியாணி பறிமுதல்! அதிகாரிகள் அதிரடி!!

தமிழகத்தின் முன்னணி உணவு நிறுவனமான பார்பி குயின் ஓட்டலில், உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கெட்டுப் போன பொருட்கள் :

தமிழகத்தில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல்களில் ஒன்று பார்பி குயின். இந்த ஹோட்டலில் வழங்கப்படும் சிக்கன் உள்ளிட்ட துரித உணவுகள், மிகவும் தரமானதாகவும், சுவையானதாகவும் இருந்து வருவதால் இது போன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் கடந்த சில நாட்களாக, இது போன்ற புகழ்பெற்ற உணவகங்களில் மோசமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், பார்பி குயின் ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மட்டமான மட்டன் கிரேவி, 5 கிலோ அழகிய சிக்கன், கெட்டுப்போன பிரியாணி முதலியவை பறிமுதல் செய்யப்பட்டது. உணவுத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்த இந்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த செய்தியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here