தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.,, லட்ச கணக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.,, லட்ச கணக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.,, லட்ச கணக்கில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இது குறித்து முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்:

வருடம் தோறும் 18 வயது நிறைவு அடைந்த புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் கடந்த சனிக்கிழமை (12.11.22) மற்றும் நேற்று (13.11.22) என 2 நாட்களாக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படாமல் இருப்பவர்கள், 18 வயது நிறைவடைந்து உள்ளவர்கள், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெயர் சேர்க்க, நீக்க ,முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது.,,வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் திருத்தம், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், சேர்ப்பு தொடர்பாக 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here