ஹாய் மாலினி., இதை சொல்லியே ஆகணும்.., காதலுக்கு முன்னுதாரமாய் இருந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் சாதனை!!

0
ஹாய் மாலினி., இதை சொல்லியே ஆகணும்.., காதலுக்கு முன்னுதாரமாய் இருந்த 'வாரணம் ஆயிரம்' படத்தின் சாதனை!!
ஹாய் மாலினி., இதை சொல்லியே ஆகணும்.., காதலுக்கு முன்னுதாரமாய் இருந்த 'வாரணம் ஆயிரம்' படத்தின் சாதனை!!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக நிலைத்து நிற்பவர் தான் கெளதம் வாசுதேவ் மேனன். சமீபத்தில் இவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. மேலும் வெறும் 30 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 60 கோடி வசூலை பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு புல்லட் வண்டியை பரிசாக கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவர் தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற திரைப்படம் என்றால் அது கௌதம் இயக்கிய வாரணம் ஆயிரம் தான். இப்படத்தில் நடிகர் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி மற்றும் திவ்யா ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர்.

நான் மீண்டு வந்ததுக்கு காரணமே இது தான்.., கணவனை இழந்த மீனாவின் கண்ணீர் பதிவு!!

மேலும் அப்பா, மகன் இருவருக்கும் இருக்கும் நட்பை குறித்தும், ஒரு தந்தை மகனுக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதை குறித்தும் வாரணம் ஆயிரம் படத்தில் அழகாக காட்சி அமைத்திருப்பார் கெளதம். இந்நிலையில் இப்படத்தை குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வாரணம் ஆயிரம் படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 வருடங்கள் நிறைவாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here