![தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., ஹால்டிக்கெட் இந்த தேதியில் பதிவிறக்கம் செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!! தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., ஹால்டிக்கெட் இந்த தேதியில் பதிவிறக்கம் செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!](https://enewz.in/wp-content/uploads/2024/02/feature-sdjgj-768x406.jpg)
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. இதனால் தேர்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க பள்ளி கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
இந்நிலையில் இப்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை வரும் 20ம் தேதி முதல் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.