
இந்தியாவில் சர்வதேச விமான நிலையமாக கருதப்படும் டெல்லி ஏர்போர்ட்டில் தற்போது கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விமான நிலையங்களில் குண்டு வைப்பதாக அவ்வப்போது சில தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுப்பது வழக்கம். அந்த வகையில் ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதோடு விமான பயணிகளின் உடை, உடமைகள் என அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதோடு நவம்பர் 30 ஆம் தேதி வரை விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு மற்றும் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்பவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு துண்டின் விலை ரூ.77,000 தான்., ஆன்லைனில் விற்பனை செய்த நிறுவனம்., கொந்தளித்த இணையவாசிகள்!!!