
இந்தியாவில் தெலுங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் இம்மாதம் (நவம்பர்) சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி மிசோரம் மற்றும் சத்தீஷ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 17) மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், போலீஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மத்திய பிரதேசம் டிமானி தொகுதியில் மோரீனா மற்றும் மிர்கான் பகுதிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் கல்வீச்சு தாக்குதல் நடந்ததால் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது.