தமிழகத்தில் ராபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா சோதனை ஆரம்பம் – விரைவில் முடிவுகள்.!

0
Rapid Test
Rapid Test

கொரோனா தோற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் இதனை பரிசோதனை செய்ய காலதாமதம் அவதால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் நேற்று தமிழகம் வந்தது.

பரிசோதனை மையம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய தமிழகம் முழுவதும் 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 19 இடங்களில் கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது.

Coronavirus Test Kits Sent to States Are Flawed, C.D.C. Says - The ...

இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது.

ரேபிட் டெஸ்ட் கிட்

கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது அவசர தேவை என்பதால் டெண்டர் விட்டு வாங்க காலதாமதம் ஆகும் என்பதால், அவசர பணிக்கு எனக்கூறி சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் நேற்று தமிழகம் வந்தது.

RNI awaits Health Ministry's authorization to import 500,000 COVID ...

இந்நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா கண்டறியும் பரிசோதனை துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை இன்று துவங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கோவை 2-ம் இடத்தில் உள்ளது.

Tamil Nadu Corona News: Tamil Nadu gets 24,000 rapid testing kits ...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் கொரோனா பரிசோதனை ஆரம்பம் ஆகியுள்ளது. முதற்கட்டமாக 1000 ரேபிட் டெஸ்ட் கிட்-கள் சேலம் வந்துள்ளது. துரித கருவிகளை கொண்டு செய்யப்படும் பரிசோதனையை சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராமன் துவங்கி வைத்துள்ளார். ஒரு கருவியின் மூலம் ஒருவருக்குதான் சோதனை செய்ய முடியும். இதன் முடிவு அரை மணி நேரத்தில் தெரியவரும். கொரோனா பாதிப்பில் தொடர்ந்து சிகப்பு மண்டலத்தில் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here