திடீரென உடல் எடை கூடி குண்டான தமன்னா, காரணம் இதுதான் – அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட கொரோனாவால் தான் மிகவும் பயந்ததாக கூறியுள்ளார். மேலும் தான் குண்டானதற்கு காரணம் அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டதால் தான் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

தமன்னா

தமிழில் வெளியான கேடி படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் தமன்னா. மேலும் அவரின் அந்த அசாத்திய நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லாம். அதன் பின் ஆனந்த தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த அளவிற்கு அவருக்கு அந்த படம் ஹிட் கொடுக்கவில்லை.

மேலும் அதன் பிறகு அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பே கண்டேன் காதலை. அந்த படத்தில் அனைவர்க்கும் தமன்னாவை பிடித்து போக ஏகப்பட்ட ரசிகர்கள் தமன்னாவிற்கு உருவாகினர். இந்த படமும் செம ஹிட் கொடுத்தது. மேலும் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் தமன்னா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

மேலும் இதுவரையில் 30 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமன்னா. இந்நிலையில் அவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தமன்னாவிற்கு ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து முழுமையாக குணமாகி வந்திருக்கும் தமன்னா 11th hours என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அந்த ப்ரோமோஷனில் தனக்கு கொரோனாவால் ஏற்பட்ட நிலையை பகிர்ந்திருந்தார்.

அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது நான் மிகவும் பயந்தேன். நிறைய பேர் இதனால் இறக்கின்றனர் என்று தெரிந்து மனதுக்குள் மரண பயம் ஏற்பட்டது. ஆனாலும் மருத்துவர்கள் என்னை காப்பாற்றி விட்டனர். மேலும் நான் இந்த அளவிற்கு குணமாக பக்கபலமாக இருந்தவர்கள் என் பெற்றோர்கள் தான் என்றும் கூறியிருந்தார். இந்த கொரோனா வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தி விட்டது என்று கூறினார்.

மேலும் நான் புகைப்படத்தை வெளியிட்டதும் நான் ரொம்ப குண்டாகிட்டேன் என்று பலரும் விமர்சித்து வந்தனர். நான் கொரோனாவிற்கு மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் இந்த உடல் பருமன் ஏற்பட்டது. ஆனால் நான் பட்ட கஷ்டத்தை அறியாமல் என்னிடம் இருக்கும் குறையை மட்டும் பேசுகின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் தான் உலகில் நிறைய இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here