தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் – ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!

0
தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் - ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!
தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் - ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!

ஆப்கானில் முன்னாள் ராணுவத்தினரும், உரிமை கேட்டு போராடும் பெண்களும் மிகுந்த சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தாலிபான் அராஜகம்:

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர். பெண்களின் உரிமைகளுக்கும், பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்திற்கும் தாங்கள் உறுதி அளித்ததாக அறிவித்து இருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் அணுகுமுறை எதிர்பார்த்த படி இல்லை என மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் நிறைமாத பெண் காவல் அதிகாரியை சுட்டுக் கொன்றனர். அது மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல் வெளிவந்தது.

தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் - ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!
தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் – ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!

மேலும், உங்களுடைய சக ஆண் மாணவர்களுடன் சமமாக அமர்ந்து படிக்க அனுமதி இல்லை என்றும் பெண்களுக்கு உத்தரவிட்டனர். இந்த அறிவிப்பு பெண்களின் உரிமைகளை நசுக்கும் செயல் என பல தலைவர்கள் தாலிபான் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது தங்களை எதிர்த்தவர்களை தேடி தேடி வேட்டையாடும் செயலில் தாலிபான் இறங்கியுள்ளனர்.

தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் - ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!
தேடி தேடி வேட்டையாடும் தாலிபான்கள் – ராணுவத்தினரை துன்புறுத்தி அராஜகம்: பெண்களை சவுக்கால் அடிக்கும் அவலம்!!

அதாவது, தலைநகர் காபூலில் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை கொத்து கொத்தாக கார்களில் கடத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், உரிமைகள் கேட்டு போராடும் மக்களை, தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் கொடூர காட்சிகள் வெளியாகி சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவர்களின் இந்த எல்லை மீறும் செயல் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here