மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கமா?? டென் ஹாக்கின் அதிரடியான முடிவு!!

0
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கமா?? டென் ஹாக்கின் அதிரடியான முடிவு!!
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கமா?? டென் ஹாக்கின் அதிரடியான முடிவு!!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோவை, மேலாளர் டென் ஹாக் செல்சியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரொனால்டோ:

அடுத்த மாதம் நடைபெற உள்ள FIFA உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், UEFA சாம்பியன்ஸ் லீக், நேஷனல் லீக், பிரிமியர் லீக் உள்ளிட்ட பல தொடர்களில் சர்வதேச அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இந்த வகையில், நட்சத்திர வீரர் ரொனால்டோ உள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியும் பல லீக் போட்டிகளில் பங்கு பெற்று தனது அணியை வலுப்படுத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் படி மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்று டோட்டன்ஹாமுக்கு எதிராக போட்டியிட்டது. இந்த போட்டியில், ரொனால்டோவுக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்க வில்லை. இதையடுத்து, தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரையிலும் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தனர். இதனால், இரண்டாவது பாதியில், மாற்று வீரராக ரொனால்டோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

T20 உலக கோப்பையில் இந்தியா எதிர்கொள்ளும் போட்டிகள்…, எங்கு எப்போது யாருடன் முழு விவரம் இதோ!!

ஆனால், இவர் களமிறங்க மறுத்ததாக மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் டென் ஹாக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், ரொனால்டோ இல்லாமல் யுனைடெட் அணி 2-0 என்ற கணக்கில் டோட்டன்ஹாம்வை வீழ்த்தியது. இந்நிலையில், நாளை செல்சியாவுக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோவை, டென் ஹாக் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here