T20 உலக கோப்பையில் இந்தியா எதிர்கொள்ளும் போட்டிகள்…, எங்கு எப்போது யாருடன் முழு விவரம் இதோ!!

0

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா எங்கு எப்போது யாருக்கு எதிராக விளையாட உள்ளது போன்ற முழு விவரத்தை இப்பதில் காணலாம்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடர் கடந்த 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே 8 அணிகள் முன்னேறிய நிலையில், 4 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. இன்றுடன் இந்த தகுதி சுற்றுகள் முடிந்த நிலையில், குரூப் A யில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் B யில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த சூப்பர் 12 அணிகள், குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளின் கீழ் தலா 6 அணிகளாக வகுக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய அணி குரூப் 2 வில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடந்த உலக கோப்பையில் பிளே அப் சுற்றோடு வெளியேற இந்திய அணி, இந்த முறை கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரில் இந்தியா விளையாட உள்ள முழு போட்டிகளின் விவரம்:
  • அக்டோபர் 23: இந்தியா vs பாகிஸ்தான், பிற்பகல் 1.30, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்.
  • அக்டோபர் 27: இந்தியா vs நெதர்லாந்து, பிற்பகல் 12.30, சிட்னி கிரிக்கெட் மைதானம்.
  • அக்டோபர் 30: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, மாலை 4.30, ஆப்டஸ் ஸ்டேடியம்.
  • நவம்பர் 2: இந்தியா vs பங்களாதேஷ், பிற்பகல் 1.30, அடிலெய்டு ஓவல்.
  • நவம்பர் 6: இந்தியா vs ஜிம்பாப்வே, பிற்பகல் 1.30, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here