காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் – ரூ.20 லட்சம் நிவாரணம்

0
army man mathiyazhagan
army man mathiyazhagan

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சண்டை மற்றும் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரில் இருக்கும் கிராமங்களையும்,ராணுவ வீரர்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது.

இந்தியா – பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தமிழக ராணுவ வீரர் வீர மரணம்

mathiyazhagan
mathiyazhagan

அர்ஜுனா விருது – ஐஸ்வர்யா பிஸ்ஸேவை பரிந்துரைத்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீர்வுக்கு வராமல் உள்ளது. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் சமயங்களில் எல்லையை தாண்டி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நமது இந்திய ராணுவமும் எல்லையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து வருகிறது.நேற்று மாலை முதல் மிரவு வரை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.அதற்க்கு பதிலடி குடுக்கும் நோக்கில் இந்திய தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது.சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். மதியழகன் 40 வயதியடையவர் ஆவார்.இதனை அடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ரூ.20 லட்சம் நிதியுதவி

காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here