தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில முதல்வர்..!

0
Arvind Kejriwal
Arvind Kejriwal

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆம்ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில மக்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரை ஆற்றினார். அதில், டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு வெண்டிலெட்டர்கள் தயாராக இருப்பதாக கூறினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஒரு நாளைக்கு ரூ.15,000 – தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்த அரசு..!

கொரோனா பாதிப்புக்கு போதுமான அளவு படுக்கைகளும் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் டெல்லியில் சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக செய்திகள் வெளியானது. அத்தகைய மருத்துவமனைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here