‘என் வாழ்க்கை, என் யோகா’ – 1 லட்ச ரூபாய் பரிசு அறிவித்த மத்திய அரசு..!

0
Modi Yoga
Modi Yoga

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு விமர்சையாக ஆன்லைன் வாயிலாக கொண்டாட முடிவு செய்துள்ளது. கூடுதலாக “‘என் வாழ்க்கை – என் யோகா” என்று வீடியோ பிளாக்கிங் போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கவும் திட்டமிட்டு உள்ளது.

யோகா தினம்:

சர்வதேச யோகா தினம் வரும் 21 ஆம் ஜூன் இல் ஆண்டுதோறும் கொண்டப்படுகிறது. இந்த நாள் மோடி அரசின் ஆயுஷ் அமைச்சகம் மூலமாக 2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் இந்த வருடம் ஆன்லைன் மூலமாக கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த வருடத்தின் சிறப்பு அம்சமாக மத்திய அரசு “‘என் வாழ்க்கை – என் யோகா” என்று வீடியோ பிளாக்கிங் ஒன்றையும் அறிமுக படுத்தி உள்ளது. அதில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுத்து உள்ளார். MyGov.gov.in உள்ளிட்ட பல இணையதளங்களில் மத்திய அரசு வெளியிடு உள்ளது. இதில் இந்திய மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளது.

போட்டிக்கான விபரங்கள்:

  • ஆண்,பெண் மற்றும் குழந்தைகள் என்று அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • இளைஞர்கள் (18 வயதிற்கு கீழுள்ளோர்), வயதுவந்தோர்(18 வயதிற்கு மேலுள்ளோர்) மற்றும் யோகா நிபுணர்கள் என்று மூன்று பிரிவுகளாக போட்டிகள் பிரிக்கப்பட்டு உள்ளது.
  • ஆறு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்ந்து எடுக்கபடுவர்.
  • அதில் முதலிடம் பிடிப்போருக்கு ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பிடிப்போர்க்கு ரூ.50,000, மற்றும் மூன்றாமிடம் பிடிப்போருக்கு ரூ.25,000 ரொக்கமாக வழங்க படும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
  • உலக போட்டியாளர்களுக்கு டாலர்களாக பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்க பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்தியக் கலாச்சாரத் தொடர்புக் கவுன்சில் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே செய்தியாளர்களிடம் கூறியதாவது”கொரோனாவால் மக்கள் ஒன்றாக கூடி யோகா செய்ய முடியாது. எனவே ஆண்டு, தங்கள் வீடுகளில், குடும்பத்தினருடன் மக்கள் யோகா செய்ய வேண்டும். இந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் வளர்த்துக் கொள்ள, யோகாவைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப்படும். சில குறிப்பிடத்தக்க அம்சங்களை வளர்ப்பதன் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here