கோட்டை விட்ட அதிமுக…கொடியை நாட்டிய திமுக – கெத்து காட்டிய ஸ்டாலின்!!

0
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் - அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி, ஸ்டாலின் சொன்னது போலவே சேலம் மாவட்டத்திலும் வெற்றியை பதிவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது.

அமோக வெற்றி :

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின், தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, தான் சொல்லியது போலவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மொத்தமாக உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி வெற்றியை படைத்துள்ளது. காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த திமுக, மொத்தமாக 21 மாநகராட்சி, 132 நகராட்சி மற்றும் 402 பேரூராட்சிகளில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆனால் அதிமுக, ஒரு மாநகராட்சி இடத்தைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த கட்சி 3 நகராட்சி மற்றும் 18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இதர கட்சிகள், 3 நகராட்சிகளிலும் 27  பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி என்ற பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 11 வார்டுகள், காங்கிரஸ் 2 வார்டுகள், அதிமுக 3 வார்டுகள் மற்றும் சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலின் தான் சொன்னது போலவே சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here