வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

0

தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

இரு தரப்புக்கும் அனுமதி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பாரதிய ஜனதா வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டது. திருத்தணியில் நவம்பர் 6ல் துவங்கி டிசம்பர் 6ல் திருச்செந்தூரில் முடிவதாக இருந்தது. இதை நடத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு தடை கோரி, செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தகவல்

தமிழக அரசு சார்பில்,’ வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது, ‘ என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசே முடிவு செய்ய உத்தரவிட்டது. அரசின் முடிவை எதிர்த்து இரு தரப்பும் வழக்கு தொடரலாம் என அறிவித்து, வழக்கை முடித்து வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here