தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்.,உடனே புக் பண்ணுங்க? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0
தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்.,உடனே புக் பண்ணுங்க? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்.,உடனே புக் பண்ணுங்க? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள், பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிய பயணங்களை மேற்கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் to நாகர்கோவில் வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் 7 ஏசி பெட்டிகள், 11 ஸ்லீப்பர் கோச், 2 பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி இந்த சிறப்பு ரயில், வருகிற 17 மற்றும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 04.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக காலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மறுமார்க்கமாக வருகிற 18 மற்றும் 25ஆம் தேதி திங்கள் கிழமைகளில் காலை 08.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என அறிவித்துள்ளனர்.

மனைவியின் 25 வருட ஆசையை இறப்பதற்கு முன்பு நிறைவேற்றிய மாரிமுத்து..,கண்கலங்கிய சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here