‘வருத்தம் தெரிவித்தார் எஸ்வி சேகர்’ – தேசியக் கொடியை அவமதித்த புகாரில் மனுதாக்கல்!!

0

பிரபல நடிகரும், பாஜக கட்சியை சார்ந்தவரும் ஆன எஸ்வி சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக மத்திய போலீசார் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்வி சேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.

எஸ்வி சேகர் வருத்தம்:

தமிழக அரசியலில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி அவ்வப்போது பரபரப்புகளை எஸ்வி சேகர் ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஒரு வீடியோவில் பேசிய எஸ்வி சேகர், இந்திய தேசியக் கொடியின் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு மதத்தினரை குறிக்கும் என்கிற வகையில் பேசி இருந்தார். இந்த காரணத்திற்காக தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

‘எங்கள் ஓட்டு உங்களுக்கே’ – தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து நன்றி செலுத்திய கல்லூரி மாணவர்கள்!!

இது குறித்து எஸ்வி சேகர் தொடர்ந்த முன்ஜாமீன் வழக்கில் செப்டம்பர் 7ம் தேதி வரை எஸ்வி சேகரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் எஸ்வி சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்யமாட்டோம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறி இருந்தனர். இந்நிலையில் இன்று மனுதாக்கல் செய்துள்ள எஸ்வி சேகர், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து உள்ளார். மேலும் வரும் காலங்களில் தேசியக் கொடிய அவமதிக்க மாட்டேன் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here