‘எங்கள் ஓட்டு உங்களுக்கே’ – தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்த கல்லூரி மாணவர்கள்!!

0
yedapadi
yedapadi

தமிழக முதல்வர் அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவித்ததில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் அவருக்கு மனித கடவுளே என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

எடப்பாடி

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் எழுதப்படாமல் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.

edapadi poster
edapadi poster

மேலும் கல்லூரிகளுக்கு இறுதியண்டை தவிர மற்றவர்களுக்கும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. அதனை அடுத்து கல்லூரியில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களும் பாஸ் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

edapadi poster
edapadi poster

இந்த அறிவிப்பை அடுத்து தமிழக முதல்வருக்கு அரியரை வென்ற அரசே. மாணவர்களும் பாகுபலி என போஸ்டர்கள் ஒட்டி அவருக்கு நன்றி செலுத்தினர். தற்போது மதுரையில் அவருக்கு மனித கடவுளே. எங்கள் ஓட்டு உங்களுக்கே என்று போஸ்டர் அடித்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here