கோபத்தில் கொந்தளிக்கும் குந்தவை.., முடிவுக்கு வரும் குணசேகரன் ஆட்டம்.., பல திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

0
கோபத்தில் கொந்தளிக்கும் குந்தவை.., முடிவுக்கு வரும் குணசேகரன் ஆட்டம்.., பல திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல டுவிஸ்டுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஆதி, குணா குடும்பத்தின் சுயரூபம் என்னவென்று ஜனனிக்கு தெரிந்து விட்டது. இதனால் ஒற்றுமையாக இருந்த வீட்டுக்குள் தினமும் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இது தவிர ஜனனி, சக்தி இருவருக்கும் இடையில் பூகம்பமே வெடிக்கிறது. இதை தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் குணசேகரன் ஜனனியை கேவலமாக பேசி வீட்டை விட்டே அனுப்பி விட்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதன் பிறகு சக்திக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதற்காக குந்தவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் குந்தவைக்கு எப்போது குணசேகரனின் உண்மையான முகம் தெரியவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நேரத்தில் சீரியலில் புது திருப்பம் ஒன்று வரவுள்ளது. அதாவது நேற்றைய எபிசோடில் குணசேகர் வீட்டில் உள்ள மற்ற மருமகள்கள் கிட்சனில் பேசிகொண்டுள்ளனர்.

வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதி.,கோவிலுக்கு விரைந்த சௌந்தர்யா குடும்பம் – விறுவிறுப்பாகும் சீரியல்!!

அப்போது பார்த்து குந்தவை சக்திக்கு பால் கொடுங்க என்று கேட்கிறார். அப்படியே குந்தவையிடம் பேச்சு கொடுக்கும் அவர்கள் ஜனனியை பற்றி கூறுகின்றனர்.அதாவது ரேணுகா தனது சித்தப்பா மகள் ஜனனி கல்யாணமாகி சென்ற வீட்டில் அவள கொடும படுத்தி அடிச்சு விரட்டி விட்டாங்க என சொல்லுகிறார். இத கேட்ட குந்தவை அதிர்ந்து போகிறார். மேலும் ஒரு பெண்ண இப்படிலாம் கொடும படுத்துற மனுஷங்க இருக்காங்களா என கோவமாக கேட்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு பொண்ண கஷ்டப்படுத்திட்டு யாரும் சந்தோசமாக வாழ மாட்டாங்க என குந்தவை கூறுகிறாள். ஆனால் இந்த கொடுமைகள் அனைத்தையும் குணசேகரன் தான் பண்ணினார் என்ற உண்மை மட்டும் குந்தவைக்கு தெரிந்தால் கண்டிப்பாக திருமணத்தை நிறுத்தி விடுவார். இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் கதைக்களம் சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here