![](https://enewz.in/wp-content/uploads/2023/09/ff-4-2-696x522.jpg)
உலகமெங்கும் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாரின் மாஸ் நடிப்பில் உருவான இப்படத்தில் அவருடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாஸாக bgm போட்டு தியேட்டரையே அலற விட்டு இருந்தார் ராக் ஸ்டார் அனிருத்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக கொடுத்து அசத்தினார் கலாநிதி மாறன். இந்நிலையில் படத்தில் ஒர்க் பண்ண 300 பேருக்கு ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசுவை கிப்ட் செய்தார் கலாநிதி மாறன். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ச்சீ.., எல்லாம் தெரிஞ்சிடுச்சு..,பொய் சொல்லாதீங்க.., ரோகினியின் வண்டவாளத்தை கண்டறிந்த மீனா!!