விண்வெளியில் ஷூட்டிங்.. அப்டேட்டாகும் உலக சினிமா – ரஷ்ய படக்குழுவின் வினோத அறிவிப்பு!!

0
விண்வெளியில் ஷூட்டிங்.. அப்டேட்டாகும் உலக சினிமா - ரஷ்ய படக்குழுவின் வினோத அறிவிப்பு!!
விண்வெளியில் ஷூட்டிங்.. அப்டேட்டாகும் உலக சினிமா - ரஷ்ய படக்குழுவின் வினோத அறிவிப்பு!!

திரை உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யாவை சேர்ந்த படக்குழு அறிவித்துள்ளது.

விண்வெளியில் படப்பிடிப்பு:

ஹாலிவுட் படம் என்றாலே வெளிநாடு தான் எனும் அளவிற்கு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான இடத்தை வெளிநாட்டு படக்குழு பெற்றுள்ளது. அந்த அளவிற்கு மிக பிரமாண்ட படங்கள் இயக்குவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், உலக திரை வரலாற்றிலேயே முதல் முறையாக பூமியில் இருந்து 420 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு முழு திரைப்படத்தை எடுக்க ரஷ்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஷூட்டிங்.. அப்டேட்டாகும் உலக சினிமா - ரஷ்ய படக்குழுவின் வினோத அறிவிப்பு!!
விண்வெளியில் ஷூட்டிங்.. அப்டேட்டாகும் உலக சினிமா – ரஷ்ய படக்குழுவின் வினோத அறிவிப்பு!!

இதற்காக, இந்த படக்குழுவை சேர்ந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், 2 நடிகைகள், 2 விண்வெளி வீரர்கள் என 6 பேர் கொண்ட குழு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட தயாராக உள்ளனர். வைஸவ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை விண்வெளியில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். ரஷ்ய மொழியில், வைஸவ் என்றால் சவால் என்று அர்த்தம். மேலும், இந்த திரைப்படத்தின் கதை குறித்த பின்னணியும் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர் என்ற கதைக்களத்துடன் கதையை நகர்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னால், அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் உதவியுடன் ஒரு திரைப்படத்தை எடுக்கப் போவதாக அமெரிக்கா சென்ற ஆண்டு அறிவித்து இருந்தது. ஆனால், விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் போட்டியில், அமெரிக்காவை, ரஷ்யா தற்போது முந்தியுள்ளது என்பது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here