சச்சின், தோனி செய்யாத சாதனையை செஞ்ச இளம் வீரர்.., வரும் நாட்களில் இதே அதிரடி தொடருமா??

0
சச்சின், தோனி செய்யாத சாதனையை செஞ்ச இளம் வீரர்.., வரும் நாட்களில் இதே அதிரடி தொடருமா??
சச்சின், தோனி செய்யாத சாதனையை செஞ்ச இளம் வீரர்.., வரும் நாட்களில் இதே அதிரடி தொடருமா??

இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இப்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் ஸ்ரேயாஸ் கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு இப்போது வரை டெஸ்ட் போட்டிகளில் 18, 14, 27, 92, 67, 15, 19, 41 என தனது முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்கங்களில் ரன்கள் குவித்து வருகிறார்.

2022ல் அதிக ரன்கள் எடுத்த டாப் பட்டியல்…, முதல் 5 இடத்தை பெற்ற இந்திய வீரர்கள் லிஸ்ட் இதோ!!

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்கங்களில் ரன்கள் குவித்த வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின், தோனி போன்ற நட்சத்திர வீரர்கள் கூட இந்த சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி வரும் காலங்களில் ஸ்ரேயாஸ் இது போன்ற பல சாதனைகளை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here