பிக் பாஸ், பைனல் வரை சென்று டாப் 3 ரேன்ஜ் க்கு வரப் போகிறார்கள் யார் என்பதை ஹவுஸ் மேட்டுகள் தகுந்த காரணத்துடன் சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
டாப் 3:
பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது டாஸ்குகள் அனைத்தும் சூடு பிடித்துள்ள நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் உச்சகட்ட பரபரப்புடன் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், இதில் டாப் 3 இடத்தைப் பிடிக்கும் போட்டியாளர்கள் யார்? என்பதை ஹவுஸ் மேட்டுகள், தகுந்த காரணத்துடன் சொல்ல வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்படி ADK, விக்ரமன் பெயரை கூறி, இதுவரை அவர் யாரிடமும் கோபப்பட்டு தேவையற்ற வார்த்தைகள் பேசியது இல்லை, இதனால் அவர் கண்டிப்பாக டாப் 3ல் வருவார் என்று குறிப்பிட்டார்.
அஜித் கேரியரை தூக்கி விட்ட “பில்லா” படம் 15 ஆண்டுகள் நிறைவு.!!
இதேபோல் தனம் அசீம் பெயரை குறிப்பிட்டு, இவரெல்லாம் என்ன மனுஷன் என யார் நினைத்தாலும் அதனை, பொய்யாக்கி விட்டு நான் என்னுடைய கேமை நிச்சயமாக விளையாடி ஜெயிப்பேன் என்று உறுதியுடன் இருக்கும் அசீம் நிச்சயம் டாப் 3ல் வருவார் என அடித்து சொல்லியுள்ளார். தனத்தின் இந்த பதிலை கேட்டு போட்டியாளர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.