நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா தற்போது புடவை அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்தும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
ராஜா ராணி ஆல்யா மானசா..!
விஜய் டிவியில் பிரபல சீரியலானா ராஜா ராணியில் நடித்தவர் ஆல்யா மானசா. சின்னத்திரையில் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவையே காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் புடவை அணிந்தவாறு இன்ஸ்டா வில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான புடவை அணிவதே கர்ப்பகாலத்தில் சிறந்தது என ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் ஆல்யா மானசா சில மேக்கப் சாதனங்களை பற்றி விமர்சித்திருந்தார். அவர் மீது அக்கறையுள்ள பல ரசிகர்கள் கர்ப்பகாலத்தில் கண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தனர்.
இது அவருக்கு நிறைமாதம் என்பதால் கூடிய விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது என்று அவரின் குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |