Home விளையாட்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை…, தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌராஷ்டிரா!!

48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை…, தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌராஷ்டிரா!!

0
48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை…, தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌராஷ்டிரா!!
48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை..., தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌராஷ்டிரா!!

ரஞ்சி டிராபியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியிடம் மும்பை அணி வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

ரஞ்சி டிராபி:

இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடரானது 38 அணிகளுக்கு இடையே கடந்த 13ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மும்பை அணியானது, முதல் இரு போட்டிகளில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, சௌராஷ்டிரா அணிக்கு எதிராக, தொடர் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த 27ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 289 ரன்களுக்குள் சுருண்டது. இந்த இலக்கை துரத்திய மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (95), சர்ஃபராஸ் கான் (75) என அதிரடியாக விளையாடிய போதும் 230 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், 59 ரன்களுடன் முன்னிலையில் இருந்த சௌராஷ்டிரா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

KGF 3 ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?? நடிகர் யாஷுடன் இணைந்து வெளியான மாஸ் அப்டேட்!!

இதில், சௌராஷ்டிரா அணி கூடுதலாக 220 ரன்கள் எடுத்திருந்தனர். இதன் விளைவால், 279 ரன்களை இலக்காக எதிர்கொண்டு மும்பை அணி விளையாடியது. மும்பை அணியில் பிரித்வி ஷா (68), சூர்யகுமார் யாதவ் (38), சர்ஃபராஸ் கான் (20) என சீரான இடைவெளியில், விக்கெட்டை பறிகொடுக்க 231 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியிடம் வீழ்ந்து, ரஞ்சியில் முதல் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக மும்பை அணி தமிழ்நாடு அணியை எதிர்த்து வரும் ஜனவரி 3ம் தேதி மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here