எழில் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கோபி.., அப்போ விரைவில் டும் டும் தான்!!

0
எழில் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கோபி.., அப்போ விரைவில் டும் டும் தான்!!
எழில் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கோபி.., அப்போ விரைவில் டும் டும் தான்!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் எழில் மற்றும் அமிர்தா இருவரையும் பிரிக்க வர்ஷினி பல சதி வேலைகளை செய்கிறார். தனக்கு எழில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஈஸ்வரியிடம் இல்லாத பொல்லாததை சொல்கிறார். இதனால் அமிர்தா, குடும்பம் எல்லோரும் ஊரைவிட்டு செல்கின்றனர். பின் அமிர்தாவை தேடி செல்லும் எழில் வர்ஷினி தான் அனைத்து பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் என்பதை தெரிந்துகொள்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் பிறகு தான் பல ட்விஸ்டுகள் வரவுள்ளது. அதாவது சென்னைக்கு வந்த எழில் வர்ஷினியிடம், சண்டை போடுவாராம். உடனே வர்ஷினி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மழுப்புவாராம். ஆனா எழில் நா இப்போ தான் அமிர்தாவ பார்த்துட்டு வரேன். நீங்க தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணனும்னு எனக்கு தெரியும் என்பாராம். மேலும் உங்களால் என்னையும் அமிர்தாவையும் பிரிக்க முடியாது.

செம்பருத்தி ஹீரோ கார்த்திக் ராஜின் அடுத்த அப்டேட்.., “Black ‘ன்’ White” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!!

நாங்க கூடிய சீக்கிரமே திருமணம் செய்து செய்ய போகிறோம் என சொல்லிவிடுவாராம். இதை கேட்ட வர்ஷினி இவர்களை பிரிக்க ஈஸ்வரி மூலம் காய் நகர்த்துவாராம். இறுதியில் இந்த விஷயம் கோபிக்கு தெரியவர அவர் எழிலை சந்தித்து ‘உங்க காதல அப்பா சேர்த்து வைப்பேன் என்று சொல்வாராம். இதைக் கேட்ட எழில் கண்கலக்கி thanks அப்பான்னு சொல்வாராம். இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோட்களில் எழில், அமிர்தா திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here