தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு – துரித நடவடிக்கையில் தேர்தல் ஆணையம்!!

0

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் கடந்த சில மாதங்கள் முன்பு காலமானார்.

இதனால் மாநிலங்களவையில் தமிழகத்திற்கான மூன்று இடங்கள் காலியானது. தற்போது அந்த மூன்று இடங்களுக்கு தனித்தனியாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு இடத்திற்கு மட்டும் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மேலும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 3-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here