44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – வருகை தரும் முன்னணி நடிகர்கள்!

0

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள சென்னை மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டிற்கு 188 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை புத்துணர்ச்சி தரும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்து அதை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக செஸ் போட்டி நடக்க இருக்கும் நிலையில் சினிமாவின் முக்கிய பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய் போன்ற நடிகர்களை கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளதால் கூட்டம் அலைமோதும் என்பதால் அவர்கள் வருவார்களா என்றால் அது சந்தேகம் தான். ஆனால் போட்டியாளர்களை உற்சாகம் படுத்துவதற்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here