ராஜா ராணி சீரியலை விட்டு ரியாவை தூக்க இது தான் காரணம்.., பக்காவாக சிக்கிய ஆஷா கவுடா!!

0
ராஜா ராணி சீரியலை விட்டு ரியாவை தூக்க இது தான் காரணம்.., பக்காவாக சிக்கிய ஆஷா கவுடா!!
ராஜா ராணி சீரியலை விட்டு ரியாவை தூக்க இது தான் காரணம்.., பக்காவாக சிக்கிய ஆஷா கவுடா!!

விஜய் டிவியில் அனல் பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி 2. இதில் நாயகியாக சீரியலின் ஆலியா நடித்து வந்தார். மேலும் இவரின் சில பர்சனல் காரணங்களால் இதை விட்டு வெளியேறினார். இதனால் இந்த சீரியலுக்கு ரியா விஸ்வநாதன் நடிக்க கமிட்டாகி கடந்த ஒரு வருடமாக நடித்து வந்தார். இந்நிலையில் இந்த சீரியலை விட்டு ரியாவும் விலகி விட்டார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இப்பொழுது தான் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, இந்த சீரியலின் படப்பிடிப்பு எப்போதும் ஒரு மாதத்தில் 15 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை எடுக்கப்படுமாம். மேலும் வெளி ஊர்களில் இருந்து வரும் நடிகர்கள் சென்னையில் இந்த 15 நாட்கள் தங்கி ஷூட்டிங்கை முடித்து கொடுக்க வேண்டுமாம். இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ரியாவுக்கு வெளி ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வந்துள்ளது. மேலும் இதுகுறித்து இவர் சீரியல் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

சினிமா பத்தி தெரியாம.., அதை போய் நம்பி காணாம போயிராதீங்க., தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கொடுத்த நடிகர் சத்யராஜ்!!

இந்த நேரத்தில் இந்த சீரியலின் அடுத்த கட்ட எபிசோடுகள் கைவசம் இல்லாத காரணத்தால் ரியாவை மீட்டும் ஷூட்டிங்கிற்கு அழைத்துள்ளனர். ஆனால் இவர்களால் ரியாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவசர அவசரமாக ஆஷா கவுடாவை இப்படக்குழு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் எடுத்துள்ளது. இப்படி ரியாவிடம் தெரிவிக்காமல் அவரை இந்த சீரியலில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதற்கு இவர் சீரியல் குழுவிடம் கேட்டதற்கு கம்யூனிகேஷன் பிரச்சனையால் தான் நாங்கள் இந்த முடிவு எடுத்தோம் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here