அட்ரா சக்க.., லெஜெண்ட் சரவணன் பெரிய ஆளுதான்ப்பா.., இயக்குனர் லோகேஷை வளைத்து போட்ட சம்பவம்!!

0
அட்றா சக்க.., லெஜெண்ட் சரவணன் பெரிய ஆளுதான்ப்பா.., இயக்குனர் லோகேஷை வளைத்து போட்ட சம்பவம்!!
அட்றா சக்க.., லெஜெண்ட் சரவணன் பெரிய ஆளுதான்ப்பா.., இயக்குனர் லோகேஷை வளைத்து போட்ட சம்பவம்!!

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

லெஜெண்ட் சரவணன்:

தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அதிரடியாக நுழைந்தவர் தான் தொழிலதிபர் சரவணன். இந்த படத்தை பிரபல விளம்பர பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கியிருந்தனர். அதுபோக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

 

இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று சரவணன் கூறியிருந்தார். இந்த நிலையில் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கு காரணம் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டு வருகிறது.

ஒருவேளை இவரும் படத்தில் இருக்கிறாரோ என்று இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவின. இந்நிலையில் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, காத்திருப்பு தொடங்குகிறது, விரைவில் அப்டேட் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் லியோ படத்தின் அப்டேட்டை தான் சொல்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here